நிலச்சரிவில் சிக்கி 200 சுரங்க தொழிலாளர்கள் பலி!

0
22

காங்கோ நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் ருபாயா என்ற பகுதியில் சுரங்க வேலைகள் நடந்து வருகின்றன. இந்த பகுதியில் கால்டன் என்ற தாது கிடைக்கிறது. இது உலக அளவில் 30 சதவீதம் வரையிலான தேவையை பூர்த்தி செய்கிறது.

எனினும், இந்த பகுதியை எம்23 என்ற கிளர்ச்சி குழு கைப்பற்றி தன்வசம் வைத்து கொண்டு, இதன் விற்பனையில் கிடைக்கும் பெரும் பலன்களை பெற்று கொள்கிறது.

இந்த சூழலில், சுரங்க வேலையில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு இருந்தபோது 2 முறை நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 200 பேர் பலியாகி இருக்க கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.

அந்த பகுதியை கிளர்ச்சி குழுவினர் கட்டுக்குள் கொண்டு வந்ததும் அரசு அதிகாரிகள் தப்பி வெளியேறி விட்டனர். இதனால், தொலைதொடர்பு வசதியும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவில் சிக்கியவர்களின் விவரங்கள் தெரிய வரவில்லை. உண்மையான பலி எண்ணிக்கை விவரங்களை உறுதிப்படுத்த முடியாத சூழல் உள்ளது. மீட்பு பணியும் தடைபட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here