நோர்வூட் நிவ்வெளிகம பிரதேசத்தில் நிலத்திழிறக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு புதிய இடத்தில் தனி வீடுகளை அமைத்து தருவதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாயஅபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளார் .
நிவ்வெளிகம பகுதியில் ஏற்பட்டுள்ள நிழத்தாழிறக்க பகுதிகளை 13.10.2018 நேரில் சென்று பார்வையிட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்
கடந்த வாரம் பெய்த மழையினால் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் நிலம் வெடிப்புகள் ஏற்பட்ட நிலையில் 6 குடும்பங்ஙளை சேர்ந்த 23 பேர் வெளியேற்பட்டனர் அதே வேலை 12.10.2018 மதியம் அப்பகுதியை ஊடறுத்து செல்லும் பொகவந்தலா அட்டன் பிரதான வீதியும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்ட நிலையில் அவ் வீதியின் போக்குவரத்து முற்றாக இரண்டவது நாளாகவும் தடைப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர்திகாம்பரம் பாதிக்கப்டோர் மத்தியில் கருத்துரைக்கையில் பாதிக்கப்படரர்களுக்கு பாதுகாப்பான இடத்தினை பெற்றுக்கொள்வதற்கு தனது அமைச்சிலிருந்த தலா 16 லட்சம் ரூபாய் தருவதாகவும் தாங்களுக்கு ஏற்ற இடத்தில் இடங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றதுடன் வீடமைப்பை தனது அமைச்சினூடாக இலவசமாக அமைத்து தருவதாகவும் தெரிவித்தார் பாதிக்கப்போர் சந்திபின் போது பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் அம்பகமுவ பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர் ..
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்