தின்மக்கழிவுகளை மீள் சுழற்சிக்குட்பட்டுத்தி பசளை தாயாரிக்கும் திம்புள்ள பத்தனையில் அமைந்துள்ள நிலையத்தை அகற்றக்கோரி ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது
திம்புள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியின் திம்புள்ள விகாரைக்கருகிலே 31.08.2017 காலை 10 மணியளவிலே ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
திம்புள்ள விகராதிபதி மற்றும் பிரதேசவாசிகளினால் பதாதைகள் ஏந்தியவண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நுவரெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் பசளைத்தயாரிப்பு நிலையத்தை அண்மித்த திம்புள்ள நகரம் மற்றும் அதனை அன்மித்த பகுதிகளில் கொசு.மற்றும் ஈக்கள் அதிகரித்துள்ளதாகாவும் கடந்த காலங்களில் நுவரெலியா பிரதேச சபைக்குற்பட்ட பகுதிகளிலுள்ள கழிவுகளே குறித்தப்பகுதியில் கொட்டப்பட்டதாகவும் தற்போது வெளியிடங்களிலுள்ள கழிவுகளும் கொட்டப்படுவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்
மேலும் நாடளாவிய ரீதியில்
ரீதியில் டெங்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறுவகையான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதிகளவில் மக்கள் வாழும் திம்புள்ள பத்தனை தின்மகழிவு பசளை தாயாரிக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்