எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நாடு தழுவியதாக பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்
நுவரெலியா நகரத்தின் பிரதான வீதிகளை மறித்து பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் குறித்த பிரதான வீதிகளுடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதில் சில வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.