நுவரெலியா – வெளிமட வீதியில் மத்திய சந்தைக்கு முன்னால் நேற்று (14) வியாழக்கிழமை புதுவருட தினத்தன்று நுவரெலியா வாழ் மக்களின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாற் சோறு சமைத்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் திணேஷ் கிருசாந்த, நுவரெலியா மாநகரசபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களான என். விஸ்ணுவர்தன், மஹிந்ததாஸ உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த எதிர்ப்பு போராட்டத்தின் போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ உடனடியாக அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும், இவர்கள் திருடிய பணத்தை வழங்க வேண்டும்,என பதாதைகள் ஏந்தியவாறு கோசமிட்டனர்.
பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, குழந்தைகளுக்கு பால் மா இல்லை,உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார இல்லை இமாதிரியான சூழ் நிலையில் புது வருட பண்டிகையை எவ்வாறு குடுபத்துடன் வீட்டில் கொண்டாடுவது. இதனாலே இன்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றோம். என போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்
(செய்தி – நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு)