நுவரெலியாவில் மரக்கறிகளுக்கான விலைகள் தொடர்ச்சியாக விலை ஏற்றம்

0
152

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிகளுக்கான விலைகள் தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வருகிறது.அதேநேரத்தில் கரட்டுக்கான விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்லப்பட்டுவதை அவதானிக்கக் முடிகிறது.

அந்த வகையில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் நுவரெலியா கரட்டுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இன்று (24.01.2024) காலை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் மரக்கறிகளுக்கான விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் கரட் கிலோ கிராம் ஒன்றின் மொத்த விற்பனை விலை 1250/=ரூபா என அறிவித்துள்ளது.
அதேபோல கோவா 470/=ரூபாய், லீக்ஸ் 480/=ரூபாய், ராபு 170/=ரூபாய், எனவும் இலை பீட்ரூட் 420/=ரூபாய், இலை இல்லா (கட்) பீட்ரூட் 520/=ரூபாவாகவும், விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கறி உருளை கிழங்கு 320/=ரூபாய்யெனவும், நோக்கோல் 340/= ரூபாய் எனவும் மோத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
டி சந்ரு. திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here