கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுவரெலியா மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவர்களுக்கான 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது
இவ் வேலைத்திட்டம் 07 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பனி இடம்பெற்று வருகிறது . இவ் வேலைத்திட்டம் நுவாரெலியா மாநகரசபை சுகாதார காரியாலயத்தில் செலுத்தப்பட்டு வருவதாக மாநகர சபையின் பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
09 பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பனி முன்னெக்கப்பட்டுள்ளது.இதில் முதல் கட்டமாக நேற்றைய தினம் 04 பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாவது தடுப்பூசி பெற்றுக்கொண்ட 60வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்று மாதம் முடிந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் பனி ஆரம்பிக்கப்படும் எனவும் மாநகரசபை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார் . நுவரெலியா பொது வைத்தியசாலையிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பனி இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
டி.சந்ரு