நுவரெலியா உட்பட மேலும் 12 மாவட்டங்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசி. – ஜுன் 8 ஆம் திகதி முதல் ஆரம்பம்.

0
172

நுவரெலியா உட்பட மேலும் 12 மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஜுன் 8 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது – என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சீனத் தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸே இவ்வாறு ஏற்றப்படவுள்ளது.

குறித்த 12 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாயமுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் முதலில் தடுப்பூசி திட்டம் ஆரம்பமாகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பணி தாய்மார் மற்றும் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தடுப்பூசி செலுத்தப்படவுள்ள 12 மாவட்டங்கள் வருமாறு,

  1. நுவரெலியா.
  2. மாத்தளை.
  3. கேகாலை
  4. திருகோணமலை
  5. அம்பாந்தோட்டை
  6. பதுளை
  7. அநுராதபுரம்
  8. புத்தளம்
  9. அம்பாறை
  10. மட்டக்களப்பு
  11. மொனறாகலை
  12. பொலன்னறுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here