மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு கனமழை பெய்யக்கூடும்.
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நுவரெலியாவில் உள்ள வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்னவிற்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்டியில் உள்ள பாத்த ஹேவாஹெட்டவிற்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது




