முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், தற்போதைய விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி. வே.இராதாகிருஷ்ணனின் வேண்டுக்கோளின் படி கடந்த வருடம் அமைச்சரவையினால் நுவரெலியா நானுஓயா பகுதியில் புதிய மும்மொழி தேசிய பாடசாலை ஒன்றை அமைப்பாதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 12.01.2019 அன்று குறித்த பகுதிக்கு விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் ராதாகிருஷ்ணன் விஜயம் செய்ததோடு, அவரோடு, கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற வேலைத்திட்டத்தின் செயல்திட்ட பணிப்பாளர் பத்மன் தலைமையிலான கட்டிட கலைஞர் பொறியிலாளர் ஆகியோர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது அங்கு ஆரம்பகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்து.
இந்த பாடசாலையை நிர்மாணிப்பதற்காக சுமார் 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தை வெகுவிரைவில் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் தலைமையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் இராதாகிருஷ்ணன் இதன்போது தெரிவித்தார்.
க.கிஷாந்தன்