நுவரெலியா பொது வைத்திய சாலையில் நேற்று (21) வெள்ளிக்கிழமை இரண்டு கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா ஆவேலியா நவகம்கொட கிராமத்தைச்சேர்ந்த 81 வயது ஆண் ஒருவரும் நுவரெலியா கந்தப்பளை பூப்பனையைச்சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் உயிர் இழந்துள்ளனர். நுவரெலியா ஆவேலியா நவகம்கொட கிராமத்தைச் சேர்ந்தவர் சிறு நீர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் திகதி நுவரெலியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட பி சீ ஆர் பரிசோதணையில் கொரோனா தொற்று
உறுதிப்பத்தப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது . சிகிச்சை பலனின்று நேற்று உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா கந்தப்பளை பொது சுகாதார பிரிவில் நேற்று இடம்பெற்ற கொரோனா உயிரிழப்புடன் இரண்டாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக கந்தப்பளை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் டப்ளியூ. ஜீ.அமில தெரிவித்தார்.
நுவரெலியா கந்தப்பளை பூப்பனை தோட்டத்தை சேர்ந்த 79 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (21) வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இம்மாதம் (08) ஆம் திகதி குறித்த நபர் தனக்கு ஏற்பட்டிருந்த சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதணையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவர் மாவட்ட வைத்திய சாலையின் கொரோனா சிகிச்சை விசேட சிகிச்சை வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (21) வெள்ளிக்கிழமை இவர் உயிரிழந்ததாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இவரின் உயிரிழப்புடன் கந்தப்பளை பொது சுகாதார பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டாவது கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
டி சந்ரு