நுவரெலியா மாவட்டத்தில் ஏதாவது பிரதேசபையின் தலைவராக வெற்றிபெற்ற பெண் வேட்பாளர்களில் ஒருவரை தெரிவுசெய்யஉள்ளேன்
பொகவந்தலாவ பிரதேசத்தில் இடம் பெற்ற மகளிர் தின நிகழ்வில் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு.
இலங்கை தொழிலாளர் காங்ரசின் சார்பாக மகளிர் தினத்தையொட்டி பெண்ங்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கிலும் பெண்ங்களுக்கு வாழ்த்து சொல்லும் அடிப்படையில் இம் முறை உள்ளுராட்சிசபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 16பெண்ங்களுள் யாராவது ஒரு பெண் வேட்பாளரை பிரதேச்சபையின் தலைவராக நியமிக்கஉள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பாக எதிர் வரும் 26ம் திகதி அல்லது எதிர்வரும் 02ம் திகதி உத்தியோக பூர்வமாக அறிவிக்கபட உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார் .
24.03.2018.சனிக்கிழமை மாலை பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார் .
இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் மகளிர் பிரிவிற்கு பொறுப்பாளருமான அனுசியா சிவராஜா அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த இவ் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட, முன்னால் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதிகனகராஜ், மற்றும் உள்ளுராட்சி சபையில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மேலும் உறையாற்றிய இ.தொ.கா.வின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் நோர்வூட் பிரதேசசபை, மஸ்கெலியா பிரதேசசபை, அக்கரபத்தனை பிரதேசசபை,கொட்டகலைபிரதேசபை, அம்பகமுவ பிரதேசசபை, நுவரெலியா பிரதேசசபை,தலவாகலை லிந்துலை நகரசபை, அட்டன் டிக்கோயா நகரசபை, வலப்பனை பிரதேசசபை,கொத்மலை பிரதேசசபை,ஆகிய சபைகளை தனியாகவும் கூட்டனியாகவும் ஆட்சியமைக்குமென குறிப்பிட்டார்
ஆனால் எமது கட்சியில் வெற்றிபெற்றவர்களை மாற்றுகட்சிகாரர்கள் தொலைபேசிமூலம் அழைப்பு விடுகிறார்கள், உங்களுக்கு எத்தனை இலட்ச்சம் வேண்டும் உங்களை பேங்கோங் போய்வருவதற்கு எத்தனை இலட்ச்சம் வேண்டும் என்றெல்லாம் விலை பேசிவருகிறார்கள் இ.தொ.கா.வின் ஆதரவாளர்கள் கூறியது எல்லாம் உங்கள் இலட்ச்சம் ரூபா பணம் எங்கள் கால் தூசிக்கு சமம்மென கூறியதாக மேலும் தெரிவித்தார்.
நிச்சயமாக ஒரு பிரதேச்சபை இ.தொ.கா.வில் வெற்றிபெற்ற பெண் ஒருவரின் தலைமையில் ஆட்சிசெய்ய போவது உறுதி பெண்ங்களுக்கும் ஆட்சி செய்யும் திறமை இருக்கிறது என்பதை வெளிகாட்டவேண்டும் பெண்ங்கள் ஆட்சி செய்யும் முறையினை பார்த்துதான் எதிர்கால சந்த்தியினருக்கு ஒரு நல்ல முன் உதாரணமாக அமையும்மெனவும் தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)