நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு!!

0
155

தலவாக்கலை பகுதியில் தொடர்சியாக பெய்த கடும் மழையால் தலவாக்கலை – ஹொலிரூட் கிழக்கு தோட்ட பகுதியில் உள்ள ஆறு பெருக்கெடுத்தமையினால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 30 குடும்பங்கள் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.இதில் 4 வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் 24 பேர் பாதிக்கப்பட்டதுடன் வீட்டில் இருந்த பொருட்கள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் சேதமாகியுள்ளது.

இச்சம்பவம் 07.06.2018 அன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஹொலிரூட் தோட்ட நிர்வாகமும், பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்க ஹொலிரூட் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தோட்ட முகாமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஹொலிரூட் கிழக்கு பிரதேசத்தில் பெருக்கெடுத்த நீர் தேங்கி இருந்ததாகவும் பின்னர் படிப்படியாக தேங்கி இருந்த நீர் வழிந்தோடியுள்ளதாக இத்தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று 2015ம் ஆண்டு மே மாதத்திலும் இப்பகுதியில் பெய்த அடை மழை காரணமாக ஹொலிரூட் கிழக்கு தோட்ட பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், அன்றிலிருந்து இன்று வரை இத்தோட்ட மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் தமக்கு இதுவரை எவரும் எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லையென கவலை தெரிவித்தனர்.

IMG-20180607-WA0014

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here