நுவரெலியா மாவட்டத்தில் ஆடி மழை – 03 உயிர்கள் பலி கட்டடிங்கள் சேதம், பல குடும்பங்கள் நிர்கதி.

0
221

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் ஆடி மழையும் காற்றும் ஆட்டங்கான வைத்துள்ளது.நேற்று முன்தினம் முதல் பெய்து கடும் மழை காரணமாக பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக மூன்று உயிர்கள் காவு கொண்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதில் கினிகத்தேனை பொல்பிட்டிய ஹிம்டிகேகம பகுதியில் வெள்ளத்தால் அடித்துச் சென்று பாட்டியும் பேத்தியும் பலியாகியுள்ளதுடன் நோட்டன் விதுலிபுர டெப்ளோ ஜனபத பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண்சரிவு காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டன.

அதனை தொடர்;ந்து வீதி போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து வீதியில் கொட்டிகிடந்த மண்,பாரிய கற்கள் அகற்றியதனை தொடர்ந்து தற்போது பொது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. இதே நேரம் கினிகத்தேனை கண்டி பிரதான வீதியில் மீபிட்டிய பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் அவ்வீதியூடான பொது போக்குவரத்து தடைப்பட்டது.தற்போது குறித்த வீதியின் போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன.

இதே வேளை நேற்று தினம் பெய்து கடும் மழை காரணமாக கொழும்பு பதுளை பிரதான தொடந்து பாதையில் பல இடங்களில் மண்வரிவு ஏற்பட்டதனால் நேற்றைய தினம் 01 திகதி புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்டன. தலவாக்கலை கொட்டகலைக்குமிடையில் உள்ள புகையிரத பாதையில் 112 38 மைல்கல் அருகில் ஏற்பட்ட மண்சரிவு அகற்றப்பட்ட போதிலும் வட்டவளை கலபொட பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் பாரிய கல் புரல்வுகள் அகற்றும் பணியில் புகையிரத ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதே நேரம் வட்டவளைக்கும் ரொசல்ல பகுதிக்கும் இடையில் பாரிய கல் ஒன்று பகையிரத வீதிக்கு சரிந்ததனால் இன்றைய தினம் (02) மலையக புகையிரத சேவைகள் இரத்தச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலையத்தின் உத்தியோகஸத்தர் ஒருவர் தெரிவித்தார்.

கடும் மழையினை தொடர்ந்து வட்டவளை கொட்டகலை உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன. வட்டவளை பகுதியில் பல வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக அங்கு சுமார் 20 மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. கொட்டகலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக றெயிட்டன் கே.ஓ பிரிவில் பல வீடுகள் பாதிப்படைந்துள்ளன.
ஹட்டன் பகுதியில் பெய்து குடும் மழை காரணமாக ஹட்டன் எம் ஆர் டவுன் பகுதியில் பாரிய கட்டடம் ஒன்று தாழிரக்கம் ஏற்பட்டுள்ளது இதனால் காமினிபுர செல்லும் வீதி பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நேற்று மூடப்பட்டுள்ளன.

இதே நேரம் நேற்று ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு மத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது இதனால் இன்று பாடசாலைகள் நடைபெறவில்லை.
நீரேந்தும் பிரதேசங்களில் பதிவாகிவரும் அதிக மழை காரணமாக நீர்த்தேக்கங்களினதும் நீர் வீழ்ச்சிகளினதும் நீர் மட்டம் அதிகரித்துள்ளன. இதனால் மேல் கொத்மலை,விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனவே களனி கங்கைக்கு அருகாமையில் மற்றும் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சார துறை பொறியியலாளர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலைவாஞ்ஞன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here