நுவரெலியா மாவட்டத்தில் 18 பேருக்கு சமாதான நீதவான்களுக்கான நியமன கடிதங்கள் ராதாகிருஷ்ணன் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

0
220

நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்ட்ட சமூக சேவையாளர்கள் மற்றும் சமூகத்தில் தன்னலமற்று சேவையாற்றும் சேவையாளர்களை தெரிவு செய்து அவர்களுக்கான சமாதான நீதவான்களுக்கான நியமன கடிதங்கள் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நுவரெலியா விக்டோரியா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட 18 நபர்களை தெரிவு செய்து குறித்த நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு மேலும் சிலபேருக்கு இரண்டாம் கட்டமாக விரைவில் சமாதான நீதவான்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்படுமென ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

குறித்த நியமன கடிதங்கள் மதகுருமார்கள்,ஆசிரியர்கள்,சமூக சேவையாளர்கள் உட்பட பலதரப்பட்ட துறையினரை தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.குறித்த நிகழ்வில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயசந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here