நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதேச சபைகள் அதிகரித்து தமிழர்கள் தலைவர்கள் ஆழும் நிலையை ஏற்படுத்திய தமிழ் முற்போக்கு கூட்டணியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மேதினமாக எதிர்வரும் மே மாதம் 7 ,ம் திகதி தலவாக்கலையில் இடம்பெறும் மேதினம் அமையும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதி செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய ஸ்ரீதரன் தெரிவித்தார்தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக்கூட்டம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்மட்டத்தானருக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்….
1965 ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தேசிய சங்கம் ஆரம்பிக்கப்ட்டது அந்த வகையில் 53 வருடத்தில் காலடி வைக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் பல்வேறு வரலாற்று சாதணைகளை படைத்து வந்துள்ளது.
உலக தொழிலாளர் தினமான மே தினத்தில் தொழிலாளர் தம் தொழில் சார்ந்த உரிமைகளுக்காகவும் வாழ்வியல் சார்ந்த உரிமைக்காகவும் உறுதி பூனும் நாளாக மேதினம் விளங்குகின்றது.
அந்த வகையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் எமது சமூகத்திற்கு காணி உறுதியும் தனி வீடுகளையும். பிரதேச சபை அதிகரிப்பையும் ஏற்படுத்தி கொடுத்து விட்டு தொழிலாளர் தினம் கொண்டாடும் ஒரே தலைவர் திகாம்பரம் மட்டுமே நாட்டதிற்கும் மேற்பட்ட பிரதேச சபை உறுபினர்களை பெற்ற மாபெரும் மேதினக்கூட்டத்தில் கலந்துகொண்டு தலைவரின் கரத்தை பலப்படுத்த அனைவரும் அணிதிரன்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்