நுவரெலியா வெள்ளத்தால் விவசாய நிலங்கள் அழிவு விவசாய குடும்பங்கள் பாதிப்பு.

0
226

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டு சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆறுகள் ஓடைகள் பெருக்கெடுத்து பல பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ள குறித்த வெள்ளம் காரணமாக லிந்தலை மெராய எல்ஜின் மன்ராசி, அக்கரபத்தனை டயகம உள்ளிட்ட பிரதேசங்களில்  பல நூற்றுக்கும் அதிகமான விவசாய நிலங்கள் அழிவடைந்து பல நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றைய தினம் லிந்துலை மற்று பகுதிக்கு பெய்து கடும் மழை காரணமாக மேல்கொத்மலை ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக அம்பேவெல தொடக்கம் தலவாக்கலை வரை உள்ள பல ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள  நூற்றுக்கணக்கான விவசாய காணிகள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கம் படுகிறது. குறித்த ஆறு லிப்பகலை பகுதியில் பெருக்கெடுத்தன் காரணமாக அங்குள்ள இருபற்கும் அதிமான விவசாய காணிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து விவசாய பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும்,இதனால் இருபது குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடரந்தும் மழை பெய்து வருவதானல் பாதிப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இவர்கள் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here