நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றும் கசாயம்!

0
101

நீண்ட நாட்களாக நுரையீரல், மார்புப் பகுதியில் தேங்கி கிடக்கும் சளியை நிமிடத்தில் கரைந்து வெளியேற உதவும் மூலிகை பானம்.

*அன்னாசி மொக்கு
*மஞ்சள் தூள்
*மிளகு

இரண்டு அன்னாசி மொக்கு மற்றும் 5 மிளகை ஒரு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி இடித்த பொருட்களை சேர்க்கவும்.

இவை கொதிக்கும் தருணத்தில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்கு கொதித்து வந்த பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இந்த பானம் உடலில் தேங்கிய சளியை கரைத்து வெளியற்றி விடும்.

*கற்பூரவல்லி
*சீரகம்

ஒரு பாத்திரத்தில் 2 கற்பூரவல்லி இலை மற்றும் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சவும்.

பிறகு இதை ஒரு கிளஸுக்கு வடிகட்டி குடித்து வந்தால் சளி பாதிப்பு முழுமையாக குணமாகும்.

*துளசி
*மிளகு
*பூண்டு

250 மில்லி தண்ணீரில் 1 கப் துளசி, 1 ஸ்பூன் மிளகு மற்றும் 2 பல் இடித்த பூண்டு சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் நெஞ்சில் படிந்து கிடந்த சளி அடித்துக் கொண்டு வெளியேறும்.

*வெற்றிலை
*துளசி
*ஓமவல்லி

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு காம்பு நீக்கிய வெற்றிலை, 1/4 கைப்பிடி அளவு துளசி மற்றும் 2 ஓமவல்லி இலையை சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் சளி கரைந்து வெளியேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here