நெதன்யாகுவிற்கு கவலை !

0
7

காசா வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்து வரும் நிலையில், குறித்த தாகுதல் தவறுத்தலாக நடந்த ஒரு “துயரமான விபத்து” என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் இராணுவம் இதுகுறித்து உள்ளக விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஊடகவியலாளர்களை காயப்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல என இஸ்ரேல் இராணுவம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதல் குறித்த கேள்விக்கு வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இது எப்போது நடந்தது? எனக்கு அது தெரியாதே!. அதுகுறித்து நான் மகிழ்ச்சியாக இல்லை. அதை பார்க்க நான் விரும்பவில்லை. அதேநேரம் இந்த மொத்த கெட்ட கனவையும் நிறுத்த வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் வைத்தியசாலை மீது திங்கட்கிழமை (25)இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here