கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாககிருஸ்ணன் அவர்களின் வேண்டுகோலுக்கு அமைய நெதர்லாந்து நாட்டின் உதவியுடன் 37 மில்லியன் யூரோ செலவில் அபிவிருத்தி செய்யபட்டு வரும்நுவரெலியா பெரிய வைத்தியசாலையின் வேலைத் திட்டங்களை பார்வையிடுவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேரடி விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டார் இவர்களுடன் ¸வைத்திய உயர் அதிகாரிகள் மத்திய மாகாண விவசாய தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் உட்பட வைத்தியர்கள் கலந்துக் கொண்டனர்.
இதன் போது மேற்படி வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மேலும் அபிவிருத்தி செய்து கூடிய விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கைகள் மேற்க் கொள்ளபட்டன.
பா.திருஞானம்