நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில், 72வது மிஸ் நெதர்லாந்து அழகுப்போட்டி நடைபெற்றது. முதல்முறையாக மிஸ் நெதர்லாந்து – 2023 பட்டத்தை, ரிக்கி வலேரி கோலே என்ற திருநங்கை வென்று சாதனை படைத்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில், 72வது மிஸ் நெதர்லாந்து அழகுப்போட்டி நடைபெற்றது.இதில், 22 வயதான திருநங்கை ரிக்கி வலேரி கோலே, முதன்முறையாக மகுடம் சூடி சாதனை படைத்துள்ளார்.
அழகு, திறமை மற்றும் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியதன் அடிப்படையில், டச்சு மற்றும் மெலுக்கன் வம்சாவளியைச் சேர்ந்த ரிக்கி வலேரி பட்டத்தை வென்றுள்ளார்.
இப்போட்டியில், ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த நதாலி மொக்பெல்சாடா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.இதன்மூலம், இந்த ஆண்டு எல் சால்வடாரில் நடைபெறவுள்ள மிஸ் யூனிவர்ஸ் போட்டியில், தனது டச்சு தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, திருநங்கை ரிக்கி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகிப்போட்டியில் வென்ற திருநங்கை ரிக்கி வலேரி கோலே கூறுகையில்,
“நான் எனது சமூகத்தை பெருமைப்படுத்தி இருக்கிறேன். அதைச் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளேன். என் சக போட்டியாளர்கள், நடுவர் குழு மற்றும் மிஸ் நெதர்லாந்து அணிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆரம்பம்தான்.
இளம்பெண்கள் மற்றும் என் சமூகத்தினரின் குரலாகவும், அவர்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்க விரும்புகிறேன். சிறுவயதில் திருநங்கையாக வெளியே வந்த பிறகு, ஆதரவற்றவளாக உணர்ந்தேன்.
கடந்த காலத்தில் பட்ட துன்பங்களை மறக்க விரும்புகிறேன். மிஸ் யூனிவர்ஸ் போட்டியை இனி வெறும் அழகுப்போட்டியாகப் பார்க்காமல், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் போட்டியாகப் பார்க்க வேண்டும்” என்றார்.
https://www.instagram.com/p/Cuc-RB0roeF/?utm_source=ig_embed&ig_rid=9611f467-5bca-4536-8347-5315adb3a717