நேபாளத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்பு!

0
6

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளம் நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நேபாளத்தில் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் சென்றது. இதையடுத்து நேபாள பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நாட்டை நிர்வகிக்க இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று அங்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் ஷேர் பகதூர் டூபா (நேபாள காங்கிரஸ்), கே.பி. சர்மா ஒலி, புஷ்ப கமல் தஹால் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் களமிறங்கியுள்ளனர். நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 165 பேர் நேரடியாகவும், 110 பேர் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலும் தேர்வு செய்யப்படுவர்.

தேர்தல் முடிந்தவுடன் தொலைதூர பகுதிகளில் இருந்து முதலில் வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வருவார்கள். அதன் பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைய சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இருப்பினும், வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே யார் முன்னிலையில் உள்ளார்கள் என்பது தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here