பல்வேறு போர்களை தான் நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் அது ட்ரம்புக்கு கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவுள்ளது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஊடகர்களுக்கு தெரிவிக்கையில்,
நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு அதுபோன்று நடந்ததில்லை. ஆனால் அவர்கள் (நோபல் பரிசு குழு) என்ன செய்தாலும் பரவாயில்லை. நான் அதற்காக அதை செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். நான் நிறைய உயிர்களைக் காப்பாற்றவே அதை செய்தேன். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை. இருந்தபோதிலும் அவருக்கு ஒரு பரிசு கிடைத்தது. ஆனால் அவர் நம் நாட்டை அழித்தார். ஒபாமா ஒரு நல்ல ஜனாதிபதி அல்ல. என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச இராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.