நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் ( ராஜமணி) என்பவர் நேற்று (03/03/2024) மாலை 04 மணிமுதல் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (04/03/2024) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில், நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்த நிலையில் , குறித்த தோட்டப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவருகின்றது.
மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




