நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளரின் சேவைக்கு இடையூருவிளைவித்து அச்சுருத்தியமைக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் மீது முறைபாடு
நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ரவிகுழந்தை வேலின் சேவைக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் இடையூரு விளைவித்து அவரை அச்சுருத்தியதாக கூறி நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ரவி குழந்தை வேல்
பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
இந்த சம்பவம் 25.11.2018.ஞாயிற்றுகிழமை மாலை இந்த முறைபாடு பதிவு செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒத்துழைப்போடு பொகவந்தலாவ நகர வீதி காப்பட் இடும் பணிகள் இடம் பெற்று கொண்டு இருக்கின்ற வேலையில் குறித்த வீதிக்கான கட்டுமான பொருட்களை ஒதுக்கிடு செய்வதற்காக நோர்வூட் பிரதேசசபைக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பொருட்களை கேசரித்து வைக்குமாறு நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் பணியாளர்களுக்கு உத்தரவு வழங்கியிருந்த போதே குறித்த காணி செல்வகந்த தோட்டபகுதிக்கு சொந்தமானது
இதில் எவ்வித கட்டுமான பொருட்களும் சேகரித்து வைக்கமுடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளரை தகாத வார்த்தையில் பேசியதாகவும் அவரின் சேவைக்கு இடையூரு விளைவித்ததாகவும்
அவரை அச்சுருத்தியதாகவும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யபட்ட முறைபாட்டில் இருந்து தெரியவந்துள்ளது
குறித்த பகுதியில் கட்டுமான பொருட்கள் சேகரித்து வைத்து இருக்கின்ற பகுதியானது பிரதேச சபைக்கு சொந்தமானதே தவிர தோட்டபகுதிக்கு உரிமை கொண்டாட முடியாது எனவும் தெரிவிக்கபடுகிறது
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)