நோர்வூட் பிரதேசபையின் அனுமதி பெறாது அமைத்த வீதியோர கடைகளை அகற்ற நடவடிக்கை!

0
139

நோர்வூட் பிரதேச்சபையின் அனுமதியினை பெறாது பொகவந்தலாவ பேருந்து தறிப்பிடத்திற்கு அருகாமையில் வீதியோர கடைகளை அமைத்தமைக்கு எதிராக பொகவந்தலாவ பொலிஸ்நிலையத்தில் நோர்வூட் பிரதேச்சபையின் தவிசாளரால் முறைபாடு ஒன்று பதிவு செய்யபட்டுள்ளதாக பொகவந்தலவா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த முறைபாடு 06.05.2018 ஞாயிற்றுகிழமை காலை முறைபாடு பதிவு செய்யபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

2324 .

நோர்வூட் பிரதேச்சபையின் தவிசாளர் கிஸோகுமார் பொகவந்தலவா பிரதேசத்திற்கு வருகை தந்து அனுமதி பெறாது அமைக்கபட்ட வீதியோர கடைகளை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

மேற்படி கடைகள் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவரால் பலவந்தமாக அமைக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இந்த கடைகளை அமைப்பதற்கு நோர்வூட் பிரதேச்சபையின் ஊடாக எவ்வித அனுமதியினையும் பெறவில்லையெனவும் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடமெனவும் அவர் தெரிவித்தார் .

தவிசாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

பொகவந்தலவா நிருபர் .எஸ்.சதீஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here