நோர்வூட் பிரதேச சபைத் தேர்தலில் ஐ.தே.க வாக்களித்த 18 ஆயிரம் மக்களுக்கும் ஏனையவர்களுக்குமான சேவைகள் தொடரும் : ஸ்ரீதரன் தெரிவிப்பு!!

0
182

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேச சபைகளில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு 18011 வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து 8 உறுப்பினர்களை வெற்றிக்கொள்வதற்கு வழிவகுத்த எமது ஆதரவு வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

நோர்வூட் பிரதேச சபைத் தேர்தலில் பொகவந்தலாவை வட்டாரத்தை மாத்திரம் வெற்றிக் கொண்ட போதும் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
பொய்ப்பிரசாரங்கள் , பல்வேறு கையூட்டல்கள் , நம்பிக்கை துரோகங்கள் போன்றன மத்தியில் எமது வாக்காளர்கள் கடந்த இரண்டு வருடகால எமது தலைமைகளின் சேவையைக்கருத்திற்கொண்டு எமக்கு கணிசமான வாக்குகளை வழங்கியுள்ளனர். இந்த வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக எமது தலைவர்களான அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் , தமிழ் முற்போக்குக் கூட்டணி முக்கியஸ்தர்கள் ,அமைப்பாளர்கள் , மாவட்டதலைவர்கள் , தோட்டக்கமிட்டி தலைவர்கள் உட்பட பலர் அயராது பாடுபட்டனர்.

.
ஐக்கிய தேசிய கட்சிக்கு நோர்வூட் பிரதேச சபைக்குக் கிடைத்துள்ள ஏழு போனஸ் உறுப்பினர்களைக் கொண்டு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கேற்ப நோர்வூட் பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் பொகவந்தலாவை வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் 2701 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

அதே போல வனராஜா வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் 2506 வாக்குகளையும் லொயினோன் வட்டார வேட்பாளர் 1811 வாக்குகளையும் சலங்கந்த வேட்பாளர் 1606 வாக்குகளையும் நோர்வூட் வட்டார வேட்பாளர் 1526 வாக்குகளையும் சமர்வில் வட்டார வேட்பாளர் 1438 வாக்குகளையும் புளியாவத்தை வட்டார வேட்பாளர் 1307 வாக்குகளையும் பொகவான வட்டார வேட்பாளர் 1176 வாக்குகளையும் லெட்சுமி மேல் வட்டார வேட்பாளர் 1113 வாக்குகளையும் தென்மதுரை வட்டார வேட்பாளர் 1072 வாக்குகளையும் லெட்சுமி கீழ் வட்டார வேட்பாளர் 1049 வாக்குகளையும் நவவெலிகம வட்டார வேட்பாளர் 701 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இவர்களின் ஒத்துழைப்புடன் நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டங்கள் , கிராமங்கள் , நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் எதிர்காலத்தில் எமது தலைமைகளின் ஆலோசனைக்கேற்ப முன்னெடுக்கப்படும்.
(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here