நோர்வூட் பிரதேச சபையின் அமர்வில் அமைதியின்மை!

0
51

நோர்வூட் பிரதேச சபையின் இவ்வருடத்திற்கான மூன்றாவது அமர்வு வியாழக்கிழமை (11) அன்று நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் பிரான்சிஸ் ஹேலன் தலைமையில் காலை 10மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் எல்ல வெல்லவாய பிரதான வீதியில் இராவணா எல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தங்களை நகரசபையில் பணிபுரிந்து வந்த உத்தியோகத்தர்கள் உயிரிழந்த 15பேருக்கும் விபத்தில் காயமடைந்த 17பேரும் விரைவில் குனமடைந்து வீடு செல்ல வேண்டும் என இறை பிரார்த்தனையும் இடம் பெற்றது.

சபை அமர்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தாமதமாக வருகை வந்ததையும் அவதானிக்க முடிந்தது  அதனை தொடர்ந்து கடந்த கால சபை அமர்வின் அறிக்கை சபையின் தலைவரால் வாசிக்கபட்டதில் சில குறைபாடுகளை சபையின் உறுப்பினர்கள் சுற்றிக் காட்டினார்கள்.

இதில் கிராமசேவக பிரிவு எழுத்துக்கள் மற்றும் சபையின் உறுப்பினர்களால் அனுப்பபட்ட பிரேரனைகளும் பிழையாக அச்சிடப்பட்ட தாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர் .

சபையில் வாசிக்கப்படும் ஒவ்வொரு கடிதங்களுக்கும் தமிழ் மொழியில் வாசிக்க பட்டாலும் சிங்கள மொழியில் வாசிக்கபட்டாலும் அது இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என வாக்குவாதம் இடம் பெற்ற போது சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ரவி குழந்தைவேல் மற்றும் சபையின் உப தலைவர் சிவகுமார் ஐக்கிய மக்கள் கூட்டணியின் உறுப்பினர்.விஜேசிங்க ஆராய்சிகே ஜனனி.தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பந்துலசேன.மற்றும் காளிமுத்து வசந்தன் ஆகியோருக்கு இடையில் சுமார் 15நிமிடங்கள் அமைதியின்மை ஏற்பட்டது.

சபையினை முறையாக வழிநடத்த வழிவகுக்க வேண்டும் என கோரி சபையின் பாதுகாப்பு கருதி பொலிஸாரை வரவலைக்குமாறு நோர்வூட் பிரதேச சபையின் செயலாளருக்கு சபையின் தலைவர் ஹேலன் பிரான்சிஸ் உத்தரவிட்டார்.

இதன் போது ரவி குழந்தைவேல் குறிப்பிடுகையில் சபையில் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் இங்கு எவரும் கட்சி பேதம் பார்க்க கூடாது சில விடயங்களை சபையில் பேச வேண்டும்.

அதற்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் உறுப்பினர் ஜனனி அதற்கு வேறு திகதியினை தேர்வு செய்து கலந்துரையாடலை மேற்கொள்ளுங்கள் சபையினை நடாத்துவதற்கு இடமளியுங்கள்.

பிரதேச சபையின் தவிசாளர் இதன் போது குறிப்பிடுகையில் நான் தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட்டு கொண்டிருக்கின்றோம்.

சபையின் உப தலைவர் தெரிவிக்கையில் உறுப்பினர் அவர்களே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் உங்களது விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுங்கள் தாங்கள் சபைக்கு நீதி கொண்டு வந்த விடயம் தொடர்பாக பேசப்பட வேண்டும் தற்போது இது தொடர்பாக பேசுவது பொருமல்ல சட்டத்தை தாங்கள் எனக்கு சொல்லி கொடுக்க தேவையில்லை எமக்கும் சட்டம் தெரியும். என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here