பட்டதாரி ஆசிரியர் நியமனம் , ஆசிரியர் உதவியாளர் பிரச்சினையையும் தீர்த்து வைத்ததினால் பெருமையடைகிறோம்; கனகராஜ்!

0
178

மலையகத்தில் படித்துவிட்டு நீண்டகாலமாக வேலைக்காக காத்திருந்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கும், அதேபோல ஆசிரியர் உதவியாளர்களின் உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு அவர்களை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு பயிற்சிக்காக அனுப்புவதற்கு எடுத்த தீர்மாணத்திற்காகவும் மத்திய மாகாண சபை நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்கிறது என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மாகாண சபை அமர்வின் போது தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை அமர்வு ச பை தலைவர் என் நிமலசிரி தலைமையில் பல்லேகல மாகாண சபை கட்டிட தொகுதியில் நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கணபதி கனகராஜ்

நாட்டின் பல மாகாணங்களில் பட்டதாரிகள் தொழில் வழங்க கோரி போராட்டம் நடத்துகிறார்கள். மாதக்கணக்கில் வீதிகளில் பல போராட்டங்களை நடத்தியும் அவர்களின் பிரச்சினை தீர்கப்படாமலிருக்கிறது. ஆனால் மத்திய மாகாணத்தில் பட்டதாரிகளின் பிரச்சினையை நாம் சரியான முறையில் அணுகியிருக்கிறோம். இவர்கள் வீதியில் இறங்கவில்லை, தொழில் கேட்டு போராட்டம் நடத்தவில்லை. தமது பிரச்சினையை எம்மிடம் முன்வைத்தபோது அதை முதலமைச்சரிடம் முறையாக கொண்டு சென்றோம். பட்டதாரிகளின் கோரிக்கையை சரியான முறையில் புரிந்துகொண்டு அவர் செயற்பட்டதனால் தற்போது அவர்களுக்கு நியமனம் வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

மலையக பெருந்தோட்ட பாடசாலைகளின் ஆசிரியர் தேவையை கருத்திற்கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானினால் கடந்த அரசாங்க காலத்தில் 3000; ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நியமனங்கள் வழங்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அவர்களில் பெரும்பான்மையோருக்கு எவ்விதமான பயிற்சியும் வழங்கப்படவில்லை. பயிற்சி முடியாமல் அவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க முடியாது.

தொலைக்கல்வி பயிற்சியை தற்போது வழங்க முன்வருபவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஆசிரியர் உதவியாளர்களுக்கு தொலைக்கல்வி முறையில் பயிற்சி வழங்குவதற்கு மாகாண சபை ஒருபோதும் சம்மதிக்கவில்லை. மத்திய அரசாங்கத்தின் தீர்மானத்தை மாகாண சபைகளின் மீது தினிக்க முற்படவேண்டாம். ஆசிரியர் பற்றாக்குறை நிலவினால் மேலும் 2000ம் பேருக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனங்களை வழங்குங்கள். 6000 ரூபா சம்பளத்தை 10.000ம் ரூபாவாக அதிகரித்து கொடுக்க அருகதையற்றவர்கள் ஆசிரியர் உதவியாளர்களின் வாழ்கையோடு விளையாட முனைகின்றனர்.

கடந்த ஒரு வாரகாலமாக ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளில் இடம்பெறும் நேர்முகப் பரீட்சைக்கு செல்லவிடாமல் அழைக்கழிக்கப்படடர்hகள். தேவையான ஆவணங்களில் கையொப்பமிடாமல் விரட்டியடிக்கப்பட்டார்கள். அசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் பயிற்சிக் கல்லுரிகளுக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இவர்கள் யார்? இவர்களுக்கு இந்த ஆதிகாரத்தை வழங்கியது யார்? உதவி ஆசிரியர்கள் எங்கு பயிற்சிபெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை கையிலெடுப்பதற்கு எந்தவொரு அதிகாரிக்கும் அதிகாரம் கிடையாது. இதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் தீர்மானத்திற்கு விட்டிருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட உதவி ஆசிரியர்களை வீதியில் விட்டு வேடிக்கை பார்க்க முடியாது. இவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். நேர்முக பரீட்சை கடந்த 3ம் திகதி நடைபெறவிருப்பதால் அதற்கு முன் இந்த பிரச்சினைக்கு திர்வை பெற்றுத்தருமாறு கோரினர். பிரச்சினையின் திவீரத்தை புரிந்து கொண்டு கடந்த 2ம் திகத p ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட ஆதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டது. மத்திய மாகாண சபை மக்களின் தேவையறிந்து செயற்பட்டதனால் மக்களின் நம்பிக்கையையும், பாராட்டையும் பெற்றுள்ளதனால் சில வங்குரோத்து அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர். ஆனால் நாம் எமது மாகாண சபையின் செயற்பாடுகளில் பெருமையடைகிறோம் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தமது உரையில் தெரிவித்தார்.

நோர்ட்டன்பிரிட்ஜ் நிருபர். மு . இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here