பட்டல்கலை பகுதியில் மரம்முறிந்து வீழ்ந்து போக்குவரத்து தடை வான் சேதம்.

0
141

டிக்கோயா போடைஸ் பிரதான் வீதியில்; மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அவ்வீதியூடான போக்குவரத்து சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் டிக்கோயா போடைஸ் பிரதான வீதியில் பட்டல்கலை பகுதியில் இன்று 07 ம் திகதி இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அவ்வீதியூடான போக்குவரத்து சில மணி நேரம் முற்றாக துண்டிக்கப்பட்டன.குறித்த மரம் வீதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றின் மீது வீழ்ந்ததில் வேன் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக போடைஸ், டயகம, அக்கரபத்தனை, சாஞ்சிமலை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

மரத்தினை வெட்டியகற்றும் பணியில் பிரதேச வாசிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here