பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்து நாசம்

0
129

தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்துள்ளது.

அட்டன் – நுவரெலியா பிரதான பாதையில் காணப்படும் இந்த புற்தரையில் நேற்று (26) பிற்பகல் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்த பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதன்போது இந்த பண்ணைக்கு அருகிலுள்ள கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையம் வரை தீ பரவியதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் சுமார் ஒரு மணித்தியாலம் நிறுத்தப்பட்டதுடன் இந்நிலையத்தின் ஊழியர்களின் பெரும் முயற்சியின் காரணமாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் தீயில் இருந்து காப்பாற்றப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நிலையத்தில் காணப்பட்ட நீரை பயன்படுத்தி எரிபொருள் நிலையம் வரை பரவிய தீயினை பெரும் போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனர். எனினும் இந்த தீ தொடர்ந்து மறுப்புறம் பண்ணையின் புற்தரை வழியாக தொடர்ந்து பரவியது.

பின்னர் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வழமைக்கு திரும்பின.

 

(அந்துவன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here