பதுளையில் பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் பலி: நால்வர் காயம்

0
123

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் புவக்கொடமுல்ல கைலாகொட பகுதியில் இன்று பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 79 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, வீதியின் குறுக்கே பாய்ந்த நாயொன்றை பாதுகாக்க முற்பட்ட போது, சரிபுரவில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியுடன் ஐந்து பேர் பயணித்துள்ளதாகவும் அவர்களில் இருவர் பெண்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here