பத்தனை திம்புள்ள தோட்டத்திற்கு அருகாமையில் வீதியில் பாரிய குழி; போக்குவரத்து இடைநிறுத்தம்!

0
279

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இதனால் அவ்வீதியினூடாக கனரக வாகனங்கள் செல்ல தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் பயணிக்கும் பேருந்துகளின் பயணிகள் குழி ஏற்பட்டிருக்கும் இரு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேரூந்துகளின் மூலம் பயணிக்கின்றனர்.

இதற்கு மாற்று வழிப்பாதையாக அட்டன் கினிகத்தேனை வீதியை பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறிய வாகனங்கள் பயணிக்கலாம் எனவும், எனினும் மிகுந்த அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

வீதி புனரமைப்பு பணிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here