இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றவாளிகளிடம் நடத்தப்பட்டு வருகின்ற விசாரணைகளில் திடுக்கிடும் பல உண்கள் வெளிவந்துள்ளன.
நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையொன்றை நடத்தி வந்துள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மேவிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த மாதம் 28ஆம் திகதி இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துர நிலங்க, தெம்பிலி லஹிரு மற்றும் பெக்கோ சமன் ஆகியோர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பொலிஸார், இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மேலதிக தகவல்களைச் சேகரிக்கவும், குறிப்பாக நுவரெலியாவில் இயங்கிய போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து ஆராயவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது