பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

0
150

கடந்த 6 மாதங்களில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஏ.ஜி.அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் ரயில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 403 பயணிகளிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதன்படி, அவர்களிடமிருந்து 12 இலட்சத்து 93 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.

இதேவேளை,மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகளுடன் இரண்டாம் வகுப்பில் பயணித்த 5,600 பயணிகளிடம் இருந்து மொத்தம் 18 இலட்சத்து 7 ஆயிரத்து 720 ரூபா அபராதப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ஏ.ஜி.அனுர பிரேமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here