மொரட்டுவ, கொரல்லவெல்ல பிரதேசத்தில் இன்று காலை பலத்த காற்று வீசியுள்ளது.
இதன் காரணமாக 11 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தற்போது தமது அதிகாரிகள் அப்பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இது தவிர எதிர்வரும் நாட்களில் மத்திய மலைநாட்டுப் பகுதிகள் மற்றும் கிழக்கிலும் அதிக மழை பெய்யக் கூடும் எனவும் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.