மூன்றில் ஒரு பங்கை பெற்றோர்கள் ஏற்க வேண்டும் என்றும், மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு அரசாங்கத்தால் ஏற்கப்படும். இலங்கை போக்குவரத்து சபையின் பாடசாலை பருவ பயணச்சீட்டு(சீசன்) கட்டணத்தை சுமார் 25 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அம்பாறை பிரதேசத்தில் இலங்கை டிப்போவுக்கான புதிய அரசாங்க பேருந்துகளை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிசு சரிய திட்டத்திற்காக அரசாங்கம் தற்போது மிக அதிக செலவை செலுத்தி வருகின்றது. எனவே, பள்ளி மாணவர்களின் சீசன் டிக்கெட் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கை பெற்றோர்கள் ஏற்க வேண்டும் என்றும், மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு அரசாங்கத்தால் ஏற்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, பாடசாலை போக்குவரத்து பஸ்களை இல்லாதொழிப்பதா அல்லது தொடர்வதா என்பது இந்த கட்டண திருத்தத்தில் தீர்மானிக்கப்படும் என தெரிவித்தார்.




