பாகிஸ்தானில் ஒன்லைன் வழியாக இணைய மோசடியில் ஈடுபட்ட, 48 சீனர்கள் உட்பட 71 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மாகாணத்தின், பைசாலாபாத் நகரில் call centerஎன்ற போர்வையில், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சீனா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ் , ஸிம்பாப்வே மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.