பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 61 பேர் உயிரிழந்ததோடு. மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பள்ளிவாசல் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு பள்ளிவாசலில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.