பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பாடசாலைகளுக்கும் முகக்கவசங்கள் வழங்கி வைப்பு.

0
150

பாடசாலை மாணவர்களிடத்தே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நீண்டநாள் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் நுவரெலியா பிரதேச சபைத்தலைவர் வேலு யோகராஜ் ஊடாக கையளிக்கப்பட்டது.

நுவரெலியா பிரதேசபையின் கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய குறித்த முகக்கவசங்கள் 08/03/2022 செவ்வாய்கிழமை கையளிக்கப்பட்டது. அந்தவகையில் நானுஓயா நாவலர் கல்லூரி, நானுஓயா நாவலர் ஆரம்ப கல்லூரி, நானுஓயா கார்லபக் தமிழ் வித்தியாலயம், நானுஓயா ஜேம்ஸ் பீரிஸ் வித்தியாலயம், பொரலந்தை பீட்றூ தமிழ் வித்தியாலயம், சமர்கில் தமிழ் வித்தியாலயம், சமர்கில்
கோட்லொஜ் தமிழ் வித்தியாலயம், கந்தப்பளை மெதடிஸ்த கல்லூரி, கந்தப்பளை ஐகிரின் ஆரம்ப பாடசாலை உட்பட நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கும் முகக்கவசங்கள் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் ஊடாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here