நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (20) மூடப்படும் என அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக இயங்கும் பாடசாலைகளுக்கு இன்றும் (19) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பாடசாலைகள் நேற்று (18) கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் கிராம சேவகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.