வெடிப்பு சம்பவத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறிய முடியும் என பாரிஸ் பொலிஸ் செய்தி தொடர்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் ஐந்தாவது வட்டாரத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தின் விளைவாக ஒரு கட்டிடத்தின் முகப்பு வீதியில் விழுந்ததாகவும், பல தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியை தவிர்க்குமாறு பாரிஸ் பொலிஸார் மக்களை வலியுறுத்தினர். மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வெடிப்பு சம்பவத்திற்காக காரணம் வெளியாகவில்லை. தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெடிப்பு சம்பவத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறிய முடியும் என பாரிஸ் பொலிஸ் செய்தி தொடர்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.