பாலர் பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கினை ஊக்;குவிக்க ஒரு மாத காலத்திற்கு நிறை உணவு.

0
147

கொட்டகலை போகாவத்தை பகுதியில் உள்ள மூன்று பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் போசனை மட்டத்தினை விருத்தி செய்து கல்வியில் அக்கறை செலுத்துவதற்காக ஒரு மாத காலத்திற்கு நிறை உணவு வழங்கும் திட்டம் ஒன்றினை சங்கர் ராஜ் நினைவு அறக்கட்டளை நிறுவனம் நேற்று 07.08.2924 மாலை போகவத்தை பகுதியில் ஸ்தாப தலைவர் நேசன் சங்கரராஜ் தலைமையில் அங்குரார்பணம் செய்து வைத்தார்.
‘கல்வியே சமூகத்தின் மாற்றம்’ எனும் தொனிப்பொருளில் கல்விக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கல்வியினை இலக்காக கொண்டு போகவத்தை பகுதியில் உள்ள மூன்று பாடசாலை மாணவர்களின் போசாக்கினை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்திற்கு 10 முட்டைகள் வீதம் ஒரு மாத காலத்திற்கு முட்டைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக மலையகப் பகுதியில் வாழும் மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் வறுமை காரணமாக மாணவர்களின் போசாக்கு மட்டம் குறைந்து கல்வியின் பால் அக்கறை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாணவர்கள் ஊக்கமின்றியே காணப்படுகின்;றன. இந்த நிலைமையினை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த சங்கரராஜ் அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் நேசன் சங்கரராஜ் கருத்து தெரிவிக்கையில் கற்றலுக்கு போசாக்கு என்பது இன்றியமையாதது போசாக்கான உணவுகளை உட்கொண்டால் தான் மாணவர்கள் கல்வியின் பால் அக்கறை செலுத்த முடியும் எனவே தான் கல்விக்கு முதலிடம் என்ற வகையில் நான் இந்த திட்டத்தினை ஆரம்பித்துள்ளேன் உங்களின் அனைத்து தேவைகளையும் என்னால் நிறை வேற்ற முடியாத போதிலும் உங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தால் இந்த சமூகத்தின் நிலை நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கையில் நான் இன்று கல்விக்காக எனது உழைப்பில் ஒரு பகுதியை செலவு செய்து வருகிறேன்.

இதற்காக மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்திலும்,வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பிரதேசங்களிலும் ஜாதி,மத பேதமின்ற இந்த திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எதிர்காலத்தில் இந்த திட்டங்களை ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வுக்கு சங்கரராஜ் அறக்கட்டளை நிறுவனத்தின் செயலாளர்; ஆ.கமல்,மத்திய மாகாண இணைப்பாளர் ரி. ராஜ்குமார்.நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் எஸ் ஆம்ஸ்டோன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here