பாலின சமத்துவம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அட்டன் மாநிலத்திற்கான மகளிர் தின விழா 13.03.2022 அன்று காலை கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்த விழா கட்சியின் பிரதி தலைவியும், மகளிர் அணியின் பொறுப்பதிகாரியுமான அனுஷியா சிவராஜா தலைமையில் நடைபெற்றது.
குறித்த விழாவில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பொது செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கட்சியின் நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரமேஷ்வரன் மற்றும் இ.தொ.காவின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கொட்டகலை பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருடன் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் போது மகளிரது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் அணி தலைவி உட்பட கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி அவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிப்பு நிகழ்வும், இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பல மாநிலங்களிலும் மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றன. அந்தவகையில், நுவரெலியா, இராகலை, அட்டன், தலவாக்கலை, நோர்வூட், பதுளை, பண்டாரவளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, அவிசாவளை மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களில் மிக சிறப்பாக மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றமை மேலும் குறிப்பிடதக்கது.
க.கிஷாந்தன்