பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரபட்ட வழக்கில் இருந்து விடுபட்டார் அர்ஜூன்

0
207

தமிழ் திரைப்பட நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் அர்ஜூன்.

கர்நாடகாவை சேர்ந்த இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் படமாக்கப்பட்ட ‘விஸ்மையா’ திரைப்படத்தில் நடித்த கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் அர்ஜூன் மீது முறைபாடு அளிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் பெங்களூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விவகாரம் கர்நாடக வர்த்தக சபையிலும் புயலை கிளப்பியது. நடிகையிடம் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர், அர்ஜூனுக்கு ஆதரவாக செயற்பட்டதால் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிவிட்டார்.

இருப்பினும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் அந்த வழக்கில் இருந்து பின்வாங்கவில்லை. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தார்.

இதுதொடர்பாக வழக்கு கர்நாடக மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சுமார் 3 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் காவல்துறையினர் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் முறையான ஆதாரங்கள், சாட்சிகள் அர்ஜூனுக்கு எதிராக இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், சக நடிகர்கள் ஆகியோர் அர்ஜூனுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை.

இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் எந்தவிதமான சாட்சிகளும் இல்லையென்று காவல்துறையினர் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி போதிய, ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் அர்ஜூனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here