பிரசவ வலியுடன் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று, குழந்தை பெற்றுக்கொண்ட பெண்

0
175

நியூசிலாந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரசவ வலி வந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக வீட்டில் இருந்து சைக்கிளில் மருத்துவமனைக்குச் சென்றார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்து.

“நான் உண்மையிலேயே பிரசவ வலியுடன் சைக்கிள் ஓட்டுவதற்குத் திட்டமிடவில்லை. ஆனால் அது அப்படி ஆகிவிட்டது.” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் எ.ம்.பி. ஜூலி அன்னா ஜென்ட்டர் பதிவிட்டிருக்கிறார்.

கிரீன் கட்சியின் போக்குவரத்துக்கான செய்தித் தொடர்பாளராக இருக்கும் ஜூலி இப்படிச் செய்வது இது முதன்முறையல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோதும் இதேபோன்ற பயணத்தை அவர் மேற்கொண்டார்.

41 வயதான ஜென்டர் சைக்கிள் ஓட்டுவதற்கு ஆதரவாகப் பேசக்கூடிய மிகவும் பிரபலமானவர்.

அதிகாலை 2 மணிக்கு பிரசவ வலி வந்ததும், அவரும் அவரது கணவரும் சைக்கிளில் மருத்துவமனைக்குச் செல்ல முடிவு செய்தனர். அந்த நேரத்தில் குழந்தை பிறப்பதற்கான தனது தசை இறுக்கங்கள் “அவ்வளவு மோசமாக இல்லை” என்று ஜூலி குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை பிறந்த பிறகு மருத்துவமனை கார் பார்க்கிங்கில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ஜூலி பதிவிட்டிருக்கிறார்.

2018-ஆம் ஆண்டில் தனது முதல் குழந்தையின் பிரசவத்தின்போதும் சைக்கிளிலேயே மருத்துவமனைக்குச் சென்று பிரபலமானவர் ஜூலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here