பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காணாவிட்டால் 45 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்க தயார்.

0
186

அரசாங்கம் ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு, நிலுவை சம்ளம் பதவி உயர்வு, இடம்மாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது தொழிற்சங்கங்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது ஒன்லைன் கற்பித்தலில் இருந்து ஆசிரியர்கள் விலகியுள்ளனர். ஆசிரியர் அதிபர்களின் பிரிச்சினைக்கு உடன் தீர்வுகொடுக்காமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுமானால் 45 தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டத்தினை முன்னெடுக்க போவதாக தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலசேகரம் தெரிவித்தார்.இன்று (13) ம் திகதி தலவாக்களையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்……

இன்று ஆசிரியர்கள் அதிபர்கள் பொருத்தவரையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அவர்களுக்கென்று முறையான இடம் மாற்ற சுற்று நிரூபம் கிடையாது நிலுவை சம்பளம் முறையாக வழங்கப்படாது பல வருட கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

புதவி உயர்வுகள் முறையாக நடைபெறுவதில்லை ஒன்லைன் கற்பித்தல் முறையை எடுத்துக்கொண்டால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சொந்த பணத்தினை செலவு செய்து இணைய வழிஊடான கற்பித்தலை மேற்கொண்டு வருகின்றனறர் அதற்காக அரசாங்கம் இலவச இணைப்புக்களை கூட பெற்றுக்கொடுக்கவில்லை இந்நிலையில் இவர்களின் பிரச்சினைகள் காலம் காலமாக தீர்க்கப்படாது அரசாங்கம் காலம் கடத்தி வருகின்றது.

இதனை தீர்ப்பதற்காகவும் கல்வியினை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிற்சங்கள் போராட்டத்தில் ஈடுபடும் போது அவர்களுக்கு எதிராக முறையற்ற விதத்தில் சட்டங்களை பிரயோகித்து வருகின்றது. இவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஒன்லைன் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனையும் அரசாங்கம் கணக்கில் கொள்ளாவிட்டால் 45 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாகவும் இதற்கான கலரந்துரைiயாடல் தற்போது இணைய வழி ஊடாக இடம்பெற்றுவருதாகவும். அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கோரிக்கைகளை வெற்றிகொள்வதற்காகவும் வலுசேர்ப்பதற்காகவும் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கல்விசார் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் இதற்கு கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அப்போது தான் காலம் கடந்த ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும். ஒரு சில தொழிற்சங்கள் அரசியல் கட்சிகளை சார்ந்துள்ளதால் அவர்களுக்கு அந்தந்த அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது அவர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் எனவே ஆசிரியர்கள் இவற்றை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

கே.சுந்தரலிங்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here