பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆசி வேண்டி மலையக ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் இன்று இடம்பெற்றன

0
188

நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் 76 வது பிறந்த தினத்தினையொட்டி மலையக ஆலயங்களிலும் ஏனைய மதத்தலங்களிலும் இன்று (18) சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. இவரது பிறந்த தினத்தினை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தலவாக்கலை கதிரேசன் தேவஸ்த்தானத்தில் இவருக்கு நல்லாசி வேண்டியும் நாட்டுக்கு நல்லாசி வேண்டியும் சிறப்பு பூஜை ஒன்று ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ மு.பிரசாந்த சர்மா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த பூஜைக்கு முன்னால் குரு பெயர்ச்சி பூஜை, யாக பூஜை, கும்ப பூஜை ஆகியன இடம்பெற்ற நாட்டின் பிரதமர் மஹிந்த அவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நல் ஆசிவேண்டி விசேட பூஜையொன்றும் இடம்பெற்றது. தமிழ் சிங்கள முஸ்லிம் ஆகிய அனைத்து மக்கள் மத்தியிலும் பேரபிமானம் பெற்ற தலைவர்களில் ஒருவரான மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும் அவரது அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசிகளை பெற்றுத்தர வேண்டும் என இதன் போது விசேட பிராத்தனைகளும் இடம்பெற்றன.

சுகாதார பொறிமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவர்களின் பங்களிப்புடன் குறித்த பூஜை நடைபெற்றது.
இந்த பூஜை வழிபாட்டில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here