‘பிரதி அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை’;தயாசிறி ஜெயசேகர

0
100

ஊழியர்களுக்கான கொடுப்பனவு போன்ற சலுகைகளைப் பயன்படுத்தியமை தொடர்பில் , பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிரதி அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆலோசித்து வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

“பிரதிஅமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று சபாநாயகர் இந்த வாரம் தெளிவாகக் கூறினார். எனவே, அவர்களை சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கருத வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில் அவர்கள் சலுகைகளைக் கோர முடியாது. எனவே, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

“ஏனைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை , ஆனால் நாடாளுமன்றத்தில் பிரதி அமைச்சர்கள் வெளியிடும் அறிக்கைகளை நான் இனி ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

பிரதி அமைச்சர்கள் அளிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டாம் என்று பொது ஊழியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் ஒரு அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here