பிரதேச சபை உறுப்பினரின் முறையற்ற முகாமைத்துவத்தால் மக்கள் கவலை.

0
200

நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர் தெரிவு செய்வதில் கிரிமிட்டிய கிராம சேவகர் பிரிவில் கடந்த சபைக்கு 1800 க்கும் மேற்பட்ட வாக்குகளால் ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருந்தார் ஆனாலும் அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூலமாகவே தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவர் இடையில் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார் புதிதாக ஒரு பெண் உறுப்பினரே கட்சியில் புதிதாக போனஸ் வாக்குகள் மூலம் கிரிமிட்டிய பிரிவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது.

எனவே இவ் உறுப்பினர் அவர் விரும்பிய இரண்டு தோட்டங்களுக்கு மாத்திரம் வீதி அபிவிருத்தி, வீதி விளக்கு போடுவது வண்ணம் இருக்கிறார். அதே வகையில் டெஸ்போட் எ , டெஸ்போட் பி டெஸ்போட் டிவிசன் இவ் மூன்று தோட்டங்களுக்கு இதுவரையில் எந்தவிதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் புரியாமையால் குறிப்பிட்ட மூன்று தோட்ட மக்களுக்கும் கவலையடையும் விடையமாக கருதுகின்றனர்.

கிராம சேவகர் பிரிவில் கார்லிபேக், தம்பகஸ்தலாவ, எவோக்க, கிரிமிட்டி, டெஸ்போட் எ, டெஸ்போட் பி, டெஸ்போட் டிவிசன் போன்ற பிரதேசங்களில் இவ் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். ஆகையால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்குக்ம், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு இந்த பிரதேசத்தின் கவனத்தில் கொண்டே இந்த பிரதேசத்திற்கான அபிவிருத்தி வேலைகள் செய்வதில் அக்கறை காட்டுங்கள்.

காரணம் இப்போது மக்கள் தெளிவாக இருக்கின்றனர். ஒரு முறை இவ்வாறு வேலைகள் செய்யாவிட்டால் மீண்டும் வாக்குகள் பெறுவது சிரமம். பொது மக்கள் வாக்களிப்பது மக்களுக்கு சேவை செய்வதற்கே. பிரதேச சபையின் தவிசாளர் கவனித்துக்கொண்டு சிறந்த முறையில் வேலைகளை செய்வதை கவனித்துப் குறித்த எமது பிரதேச சபையின் உறுப்பினரை வழி நடத்தும்படி இப்பிரதேச மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here